பிரித்தானியாவில் 10 வயது சிறுமியை ஷாக் கொடுத்து சித்திரவதை செய்து சீரழித்த மனித மிருகம்: அதிர்ச்சி சம்பவம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவின் Coventry பகுதியைச் சேர்ந்த ஒரு மனித மிருகம் 10 வயது சிறுமியை ஷாக் கொடுத்து சித்திரவதை செய்ததோடு பாலியல் துஷ்பிரயோகம் செய்ததும் தெரிய வந்துள்ளது.

David Challenor (50) என்னும் அந்த நபர் ஒரு கம்பத்தில் கட்டி வைத்து சாட்டையால் அடித்து, மின்சாரத்தை அவளது பிஞ்சு உடலில் செலுத்தி என தனது அகோர ஆசைகளை எல்லாம் நிறைவேற்றிக் கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.


முறை தவறிய ஆசைகள் கொண்டவனான அந்த நபர் அந்த சிறுமியின் உடைகளைக் களைத்து குழந்தைகள் அணிவது போன்ற ஒரு நாப்பியை அணிவித்து அவளை தாக்குவானாம்.

கைது செய்யப்பட்டபோது அந்த சிறுமி பொய் சொல்வதாகவும் கற்பனைக் கதைகள் புனைவதாகவும் அவன் கூறினாலும் அவன் வீட்டை சோதித்தபோது சித்திரவதை செய்ய பயன்படுத்தும் பொருட்கள் அவன் வீட்டில் கண்டெடுக்கப்பட்டதோடு ஆபாச படங்களும் கண்டெடுக்கப்பட்டன.

அவன் குழந்தைக்கு ஏற்படுத்தியுள்ள பாதிப்பு எண்ண முடியாத அளவுக்கு அளவு கடந்தது என்று தெரிவித்துள்ள நீதிபதி Challenor க்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

அது மட்டுமின்றி அவனது தண்டனைக் காலம் முடிந்த பிறகும்கூட அவனை விடுவிப்பதா இல்லையா என்பதை ஆணையம் ஒன்று அந்த நேரத்தில் முடிவு செய்யும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...