பிரித்தானியா இளவரசி மெர்க்கல் திருமணத்தின் போது கொடுக்கப்பட்ட பூங்கொத்தை ஏன் தூக்கி எறியவில்லை தெரியுமா?

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியா இளவரசி மெர்க்கல் திருமணத்தின் போது தனக்கு கொடுக்கப்பட்ட பூங்கொத்தை ஏன் தூக்கி எறியவில்லை என்பது குறித்த காரணம் வெளியாகியுள்ளது.

பிரித்தானியா இளவரசர் ஹரிக்கும், அமெரிக்க நடிகையான மெர்க்கல்லுக்கும் கடந்த 19-ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

மிகவும் விமர்சியாக நடைபெற்ற இந்த திருமணத்தை உலகிலுள்ள பல ஊடகங்கள் முக்கியச் செய்தியாக வெளியிட்டன.

இந்நிலையில் இந்த திருமணத்தின் போது, தன் கையில் கொடுக்கப்பட்ட பூங்கொத்தை மெர்க்கல் தூக்கி எறியாமல் வைத்திருந்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று அதற்கான காரணம் குறித்து விளக்கியுள்ளது. முதல் உலகப்போரின் போது இறந்த இராணுவ வீரரின் சமாதி Westminster Abbey பகுதியில் உள்ளதாகவும், இந்த சமாதி முதல் உலகப்போரில் இறந்த அனைவருக்கும் மரியாதை செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த Westminster Abbey-வில் இருக்கும் சமாதிக்குத் தான் மெர்க்கலின் பூங்கொத்து கடந்த மே மாதம் 20-ஆம் திகதி அதாவது திருமணம் முடிந்த அடுத்த நாள் கொண்டு வரப்பட்டதாகவும், இது அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த முறையை தற்போது மகாராணியாக இருக்கும் எலிசபத்தின் தாயார் கடந்த 1923-ஆம் ஆண்டு George VI-ஐ திருமணம் செய்யும் போது பின்பற்றியதாகவும், அப்போது அவர் திருமணத்திற்கு முன்னரே தனக்கு கொடுத்த பூங்கொத்தை இங்கு வைத்து விட்டு சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதை அவர் சகோதரர் Fergus 1915-ஆம் ஆண்டு போரின் போது கொல்லப்பட்டதன் நினைவாக செய்ததாக தெரிவிக்கின்றன.

மேலும் மெர்க்கலிடம் இருந்த பூங்கொத்தில் Forget-Me-Nots வகை பூக்களும், இளவரசி டையானாவிற்கு பிடித்த பூக்களும் இருந்ததாகவும், இதை ஹரி தன்னுடைய அம்மாவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் அந்த பூங்கொத்தில் பூக்களை வைத்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...