பிரித்தானிய மகாராணியின் ஆஸ்தான மருத்துவருக்கு நேர்ந்த சோகம்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய மகாராணியின் ஹோமியோபதி மருத்துவர் மீது லாரி ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

பிரித்தானிய மகாராணியின் ஆஸ்தான ஹோமியோபதி மருத்துவர் Peter Fisher (67), லண்டன் பகுதியில் லண்டன் பகுதியில் நடைபெற்ற சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். சைக்கிளில் சென்றுகொண்டிருந்த Peter மீது லாரி ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், லண்டன் நகரில் இந்த வருடத்தில் மட்டும் 8 பேர் சைக்கிள் விபத்தில் பலியாகியுள்ளதாவும் தெரிவித்துள்ளனர்.

மதிக்கப்பட வேண்டிய ஒரு நல்ல மருத்துவர் அவரின் மரணசெய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என மகாராணியின் முன்னாள் அறுவை சிகிச்சை மருத்துவர் Marcus Setchell இரங்கல் தெரிவித்துள்ளார். மருத்துவரின் மரணம் குறித்து விரைவில் மகாராணியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அரண்மனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Peter லண்டன் பல்கலைக்கழக கல்லூரி யில் முன்னாள் இயக்குனராக பணியாற்றியதோடு, பிரித்தானிய மகாராணியின் சிறப்பு மருத்துவராங்க 15 வருடங்களாக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...