57 ஆண்டுகளுக்கு முன்னர் திருடு போன புத்தர் சிலை இங்கிலாந்தில் மீட்பு

Report Print Vijay Amburore in பிரித்தானியா

இந்தியாவில் 57 ஆண்டுகளுக்கு முன்னர் திருடு போன 12-ம் நூற்றாண்டு புத்தர் சிலையை மீட்டு இங்கிலாந்து பொலிஸார், இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளனர்.

பீகார் மாநிலம் நாளந்தாவில் உள்ள தொல்லியல் துறை அருங்காட்சிகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த 14 புத்தர் சிலைகள், கடந்த 1961-ம் ஆண்டு காணாமல் போயுள்ளது.

இந்த சிலைகளில் ஒரு சிலை மட்டும் பலரின் கைகளில் மாறி, இறுதியில் கடந்த மார்ச் மாதம் அன்று லண்டனில் உள்ள கலை மற்றும் பழம்பொருட்கள் கூடத்தில் ஏலத்திற்கு வந்தது.

அந்த சிலை இந்தியாவில் இருந்து திருடப்பட்ட சிலை என்பதை இங்கிலாந்து கலைப்பொருட்கள் குற்றப்பிரிவு பொலிஸாரும், இந்தியா பிரைட் புராஜெக்ட் என்னும் அமைப்பைச் சேர்ந்த விஜய் குமார் என்பவர் உறுதி செய்தார்.

இதனையடுத்து சிலையை நீண்ட நாட்களாக இந்தியாவிற்கு கொண்டு வரும் பணியில் ஈடுபட்டிருந்த பிரித்தானிய பொலிஸார் சட்ட முறைப்படி சிலை மீட்டு, லண்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ஒய்.கே. சின்காவிடம் சுதந்திர தினத்தன்று ஒப்படைத்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers