லண்டனில் ஆசிட் வீச்சு தாக்குதல் நடத்திய மர்ம நபர்... தகுந்த தண்டனை கொடுத்த இளைஞர்கள்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

கிழக்கு லண்டன் பகுதியில் ஆசிட் வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபருக்கு, கும்பலாக சேர்ந்த இளைஞர்கள் கூட்டம் தகுந்த தண்டனை வழங்கியுள்ளனர்.

லண்டன் நகரின் கிழக்கு பகுதியில் Maryland ரயில்நிலையம் அருகே செயல்பட்டு வரும் சூப்பர் மார்கெட்டிற்கு, நேற்று இரவு முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார்.

அவரது தோரணை அப்பாவியாக இருந்தாலும், பேச்சு கோபத்தை தூண்டும் அளவில் இருந்ததால், கடையை விட்டு வெளியேறுமாறு ஒருவர் சத்தமிட்டுள்ளார்.

பின்னர் கடையை விட்டு வேகமாக வெளியேறிய அந்த நபர் திரும்பி வந்து, தன்னுடைய பாக்கெட்டிலிருந்த பாட்டில் ஒன்றினை எடுத்து சத்தமிட்டவரை நோக்கி வீசியுள்ளார்.

இந்த சம்பவத்தில் பாட்டிலில் இருந்து வெளியேறிய ஒருவிதமான திரவத்தால் அங்கிருந்த ஒருவரின் கண் பகுதி லேசான காயமடைந்துள்ளது.

இதனையடுத்து அங்கிருந்த சக இளைஞர்கள் சிலர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியதோடு, முகமூடி அணிந்து தாக்குதல் நடத்தியவனுக்கும், baseball மட்டையை கொண்டு தர்ம அடி கொடுத்தனர்.

இதனை வீடியோவாக காட்சி படுத்திய இளைஞர் ஒருவர் தன்னுடைய முகப்புத்தகத்தில், "நீதி வழங்கப்பட்டு விட்டது" என குறிப்பிட்டு வீடியோவினை பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ பதிவிடப்பட்ட சில மணி நேரங்களிலே 400,000 பார்வையாளர்களை கடந்து சென்றுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers