3 வயது குழந்தையின் அறைக்குள் புகுந்த நரி.. அடுத்த நடந்த அசம்பாவிதம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

தென்கிழக்கு லண்டன் பகுதியில் வீட்டிற்குள் புகுந்த நரி ஒன்று, உறங்கி கொண்டிருந்த 3 வயது சிறுமியை கடித்துவிட்டு தப்பி சென்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பிரித்தானியாவின் தென்கிழக்கு லண்டன் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் Cooper (37). இவர் கடந்த சில நாட்களாகவே நிலவி வரும் கடுமையான வெப்பத்தினால், மாடியில் தன்னுடைய 3 வயது மகள் Heidi Cooper-ஐ உறங்க வைத்துவிட்டு, காற்று வருவதற்காக பின்பக்க கதவை திறந்து வைத்து விட்டு சென்றுள்ளார்.

வீட்டின் கீழ் பகுதியில் தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருக்கும்போது திடீரென குழந்தை கதறி அழும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் திடுக்கிட்டு வேகமாக மாடிக்கு சென்ற Cooper, அறையின் விளக்கை ஆன் செய்து பார்த்தார். அப்போது ரத்தம் சொட்ட சொட்ட குழந்தை படுக்கையில் இருக்க, ஜன்னல் வழியாக நரி ஒன்று தப்பி சென்றுள்ளது.

தந்திரமான நரி மீண்டும் எப்பொழுது வேண்டுமானாலும், அதே அறைக்கு திரும்பி வரலாம் என சந்தேகம் எழுந்ததால், அறையின் பின்பக்க கதவை அடைத்துவிட்டு குழந்தையின் அருகிலே இருந்ததாக Cooper தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தில், குழந்தையில் கைகளில் லேசான சிராய்ப்புகள் ஏற்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பிரித்தானியாவில் முதன்முதலாக 1990களில் தான் நரிகள் சுற்றித்திரிவது கண்டறியப்பட்டது. ஆனால் அவை தற்போது பெருகி சுமார் 150,000 நரிகள் பிரித்தானிய நகரங்களில் சுற்றி திரிவதாக சமீபத்திய அறிக்கையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்