பிரித்தானியாவில் 13 வயது சிறுமிக்கு நடந்தது என்ன? 1000-க்கும் மேற்பட்டோர் வரும் இடத்தில் சிசிடிவி காட்சியை போட்டு காட்ட முடிவு

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் குத்தி கொலை செய்யப்பட்ட சிறுமி தொடர்பான சிசிடிவி காட்சியை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இருக்கும் கால்பந்து விளையாட்டு நடைபெறும் அரங்கில் போட்டுகாட்டவிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவின் woodland பகுதியின் Southampton Sports Centre-க்கு அருகில் சுமார் 13 வயது மதிக்கத்தக்க சிறுமி கடந்த ஜுலை மாதம் 26-ஆம் திகதி காலை உள்ளூர் நேரப்படி 07.45 மணிக்கு பயங்கரமாக குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார்.

இதையடுத்து இது தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த போதும், எந்த ஒரு ஆதாரமும், குற்றவாளியும் சிக்காததால், திணறி வருகின்றனர்.

இந்நிலையில் நாளை St Mary’s மைதானத்தில் Southampton கிளப் கால்பந்து அணிக்கும் Burnley அணிக்கும் போட்டி நடைபெறவுள்ளது.

இந்த போட்டியை காண்பதற்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருவார்கள் என பொலிசார் எதிர்பார்க்கப்படுவதால், கொலை செய்யப்பட்ட Lucy McHugh சிறுமியின் இறுதி நிமிட சிசிடிவி காட்சியை பொலிசார் போட்டு காட்ட முடிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே இந்த சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருந்தாலும், இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏனெனில் பலர் இங்கு வரவாய்ப்புள்ளதால், இந்த சிறுமியை கடைசி நேரத்தில் பார்த்திருக்கலாம், அவர்கள் ஏதேனும் தகவல் கொடுத்தால், இந்த கொலை தொடர்பாக குற்றவாளி சிக்குவதற்கு வாய்ப்பிருப்பதால், பொலிசார் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

குறித்த சிசிடிவி காட்சியில் சிறுமி Tesco Express இருக்கும் சாலையான Coxford சாலை மற்றும் Lordswood சாலையை ஜுலை மாதம் 25-ஆம் திகதி காலை உள்ளூர் நேரப்படி 9.30 மணிக்கு கடந்து செல்கிறார்.

அதன் பின் அங்கிருக்கும் ஸ்போர்ட்ஸ் செண்டருக்கு அருகில் சிறுமியின் உடல் கிடந்துள்ளது. இதற்கு இடைப்பட்ட பகுதில் சிறுமிக்கு என்ன நடந்திருக்கும் என்பதே பொலிசாரின் கேள்வியாக உள்ளது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தகவல் கொடுக்கப்படும் நபருக்கு £10,000 பரிசாக கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி தகவல் கொடுக்கப்படும் அந்த நபர் தான் இந்த கொலைக்கு தொடர்பானாவர் என்று நிரூப்பிக்கப்பட்டாலே இந்த தொகை கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers