பிரித்தானியாவில் தாயாரின் உயிரை காப்பாற்றிய 4 வயது சிறுமி: குவியும் பாராட்டுக்கள்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் படிக்கட்டில் தடுமாறி விழுந்து சுய நினைவை இழந்த தாயாரை 4 வயது சிறுமி சாமர்த்தியமாக காப்பாற்றிய சம்பவம் பலரது பாராட்டுகளையும் பெற்றுவருகிறது.

பிரித்தானியாவின் டர்ஹாம் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

தாயார் மயக்கமுற்று கிடப்பதைக் கண்ட 4 வயது சிறுமி அழுது அக்கம்பக்கத்தினரை கூட்டாமல், தொலைபேசியில் 999 என்ற எண்ணுக்கு அழைத்துள்ளார்.

6 நிமிடங்கள் நீண்ட அந்த அழைப்பில், தமது தாயார் தூக்கத்தில் இருப்பதாகவும், ஆனால் தலையில் இருந்து ரத்தம் வழிந்தோடுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

சிறுமியின் குடும்ப பெயரை கேட்ட அதிகாரிகளிடம், அது தமக்கு நினைவில் இல்லை எனவும், ஆனால் தமது செல்ல நாயின் பெயர் மாக்ஸ் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தகவலை திரட்டிய பொலிசார் சம்பவப்பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர். பொலிசாரை உள்ளே அனுமதித்த சிறுமி, அவர்களிடம் நடந்தவற்றை மீண்டும் ஒப்புவித்துள்ளார்.

இதனிடையே மருத்துவ உதவிக்குழுவினர் விரைந்து வந்து மயக்கமுற்று கிடந்திருந்த சிறுமியின் தாயாரை மீட்டுள்ளனர்.

சிறுமியின் தாயார் Ellen Oselton-கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவை பாதிக்கும் ஒருவகை நோய் உள்ளது.

இதுவே அவரை படிக்கட்டு ஏறும்போது நிலைதடுமாறி விழச் செய்துள்ளது.

தமது மகள் மட்டும் அவசர உதவிக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றால் தற்போது தாம் உயிருடன் இருந்திருக்க மாட்டேன் என கண்ணீருடன் தெரிவித்துள்ளார் அந்த இளம் தாயார்.

இதனிடையே சிறுமியின் அந்த 6 நிமிட உரையாடலை டர்ஹாம் பொலிசார் வெளியிட்டு, சிறுமியை அலுவலகத்தில் அழைத்து பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers