காதலை முறித்துக் கொண்ட பிரித்தானிய பெண்: 14 ஆண்டுகள் தொடர்ந்து பழிவாங்கிய நபர்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் இணையத்தில் சந்தித்த நபர் தமக்கேறேறவர் இல்லை என்பதால் உறவை முறித்துக் கொண்ட பெண் நீண்ட 14 ஆண்டுகள் பழி வாங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது 48 வயதாகும் லிண்ட்ஸே கோல்ட்ரிக் டீன் என்ற பிரித்தானிய பெண்மணி முதன் முறையாக டேட்டிங் இணைய தளங்களை பயன்படுத்த துவங்கியபோது அவருக்கு 34 வயது.

ஒத்த கருத்துடைய நபர் ஒருவரின் நட்பு கிடைக்க வேண்டும் என ஆசைப்பட்ட அவருக்கு தொழிலதிபரான பால் குரான் என்பவரின் அறிமுகம் கிடைத்தது.

இருவரும் தங்கள் மின் அஞ்சல் மூலம் விருப்ப வெறுப்புகளை பகிர்ந்து கொண்டனர். இந்த நிலையில் பால் குரானை லிண்ட்ஸே நேரில் சந்தித்தார்.

இருவரும் நெருங்கி பழகியும் வந்தனர். இதனிடையே பால் குரான் தமக்கேற்றவர் அல்ல என்ற மன நிலைக்கு வந்துள்ளார் லிண்ட்ஸே.

ஒரு கட்டத்தில் தமது கருத்தை வெளிப்படையாக குரானிடம் தெரிவித்துள்ளார். இருவரும் பிரிந்து விடவும் முடிவு செய்தனர்.

அதுவே கடைசியாக இருக்கும் என கருதிய லிண்ட்ஸேவின் வாழ்க்கை அடுத்த 14 ஆண்டுகள் நரகமாக மாறப்போவதை அவர் கணித்திருக்கவில்லை. இருவரும் உறவை முறித்துக் கொண்ட ஒரு வாரத்தில் குறித்த நபர் இணையத்தில் ஆபாச படங்களால் லிண்ட்ஸேவை சித்திரவதை செய்யத் துவங்கியுள்ளார்.

பல இணைய பக்கங்களை வாங்கி அதன் மூலம் ஆபாச படங்களை பதிவேற்றி ஒரு பாலியல் தொழிலாளி போன்ற பிம்பத்தை அவர் உருவாக்கியுள்ளார்.

ஒரு கட்டத்தில் லிண்ஸேவின் பெயரில் மட்டும் சுமார் 15 ஆபாச இணைய தளங்கள் இயங்கியது. அதில் மிக மோசமான ஆபாச படங்கள், கதைகள், கடிதங்கள் என நிரம்பி வழிந்தது.

இதனால் மனமுடைந்த லிண்ட்ஸே பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் எச்சரிக்கை மட்டுமே பொலிசாரால் செய்ய முடிந்தது.

ஆனால் மனம் தளராத லிண்ட்ஸே தமது சட்ட போராட்டத்தை தொடர்ந்தார். கடந்த மாதம் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கு லிண்ட்ஸேவுக்கு ஆதரவாக தீர்ப்பானது.

மட்டுமின்றி நீண்ட 14 ஆண்டுகளாக தாம் அனுபவித்த மன வேதனைக்கு எதுவும் ஈடாகாது என்ற போதும், நீதிமன்றம் பால் குரானுக்கு விதித்த 57,000 பவுண்ட்ஸ் அபராத தொகையை பெற்றுக்கொள்ள அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய வரலாற்றில் நீண்ட பல ஆண்டுகள் விசாரணையில் இருந்த வழக்கில் இதுவும் ஒன்று என கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers