பிரித்தானியாவில் மரணத்தின் விளிம்பில் இருக்கும் பெண்ணை திருமணம் செய்த நபர்! அதன் பின் நடந்த அதிசயம்

Report Print Santhan in பிரித்தானியா
419Shares
419Shares
ibctamil.com

பிரித்தானியாவில் மார்பக புற்று நோய் காரணமாக இறக்கப்போகும் பெண்ணின் கடைசி ஆசையை, அவருடன் ஒன்றாக வாழ்ந்து வந்த நபர் நிறைவேற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவைச் சேர்ந்தவர்கள் Linda Carolan(50)-Marcus Fellows(46). இவர்கள் இருவரும் திருமணம் செய்யாமலே 25 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் Linda Carolan-க்கு கடந்த 7-ஆண்டுகளுக்கு முன்பு மார்பக புற்றுநோய் ஏற்பட்டுள்ளது.

இதனால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த இவர், தற்போது மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதால், Portsmouth-ல் உள்ள Queen Alexandra மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இன்னும் சில மணி நேரங்களே உயிரோடு இருப்பார் என்று மருத்துவர்கள் கூறப்பட்ட நிலையில், Linda Carolan தான் இருக்கும் இந்த சில மணி நேரம் Marcus Fellows-விடம் இருக்க வேண்டும், அவரை திருமணம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து மருத்துவ நிர்வாகம் அதற்கான வேலைகளை செய்துள்ளது.

இருவருக்கும் சட்டப்படி, அதாவது உள்ளூர் திருமண பதிவு அலுவலகத்திலிருந்து அதிகாரிகள் அழைத்து வரப்பட்டு, அதன் பின் அவர் சிகிச்சை பெற்று வரும் இடத்தில் பலூன்கள் போன்றவை கட்டப்பட்டு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

திருமணம் முடிந்த நிலையில், அவர் சில மணி நேரத்திலே இறந்துவிடுவார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அவரின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்துவருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதைக் கண்டு மருத்துவர்களே ஆச்சரியமடைந்துள்ளனர்.

மேலும் அவரை திருமணம் செய்த Marcus Fellows சில மணி நேரம் மட்டுமே உயிரோடு இருப்பாள் என்று கூறினர். தற்போது அவள் நல்லபடியாக முன்னேற்றம் அடைந்து வருகிறாள்.

இருக்கிற காலம் அவள் எத்தனை நாட்களோ தெரியவில்லை, ஆனால் தற்போதைக்கு நாங்கள் எங்களுடைய திருமண நாட்களை மகிழ்ச்சியாக கொண்டாடவுள்ளோம் என்று கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்