பணியாளரை கொடூரமாக தாக்கிய மகன்கள்.. வீடியோ எடுத்து வெளியிட்ட தாய்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

இங்கிலாந்தில் உள்ள உணவகம் ஒன்றில் மது அருந்திய இரண்டு இளைஞர்கள், உணவக ஊழியரை கொடூரமாக தாக்கியதை அவர்களது தாயார் படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இங்கிலாந்தின் Lincolnshire பகுதியில் உள்ள மெக்டொனால்டு உணவகத்தில் Jasmine Brudenall (28) என்ற பெண் தன்னுடைய குடும்பத்துடன் உணவருந்த சென்றுள்ளார்.

மது அருந்திய நிலையில் இருந்த அவரது கணவர் மற்றும் 16, 19 வயதுள்ள இரு மகன்களும் சத்தமிட்டவாறே உணவகத்தில் இருந்துள்ளனர்.

இதனை பார்த்த சக வாடிக்கையாளர்கள் சிரித்துக்கொண்டே இருந்துள்ளனர். மேலும், உணவகத்தில் வேலை செய்யும் ஊழியர்களை மூன்று பேரும் தரக்குறைவாக பேசிக்கொண்டும், வாடிக்கையாளர்களுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில் நடந்து கொண்டதாலும் உணவகத்தை விட்டு வெளியேறுமாறு உணவக மேலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்களது மகன்கள் இருவரும் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை வீடியோவாக படம்பிடித்த Jasmine யாரவது உதவுமாறு கோரிக்கை விடுத்தார். ஆனால் அங்கிருந்த யாரும் சிறு உதவி கூட செய்யாமல் வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தனர்.

இந்த சம்பவம் முடிந்த பின்னர், மேலாளரிடம் மகன்கள் செய்த தவறுக்காக Jasmine மன்னிப்பு கோரினார். மேலும் தான் எடுத்த வீடியோவினையும் இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். வீடியோ இணையத்தில் வைரலாக பரவியதை அடுத்து, இந்த சம்பவம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும், தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற சேவையை செய்வோம் என உணவக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் உணவாக ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...