கர்ப்பமாக இருப்பதாக நினைத்து மகிழ்ச்சியில் திளைத்த பெண்: அடுத்து நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் தனியார் நிறுவன உபகரணம் மூலம் நடத்தப்பட்ட பரிசோதனையில் கர்ப்பமாக இருப்பதாக உறுதிசெய்யப்பட்ட பெண் பின்னர் கர்ப்பமாக இல்லை என தெரியவந்துள்ளது.

மிச்சைலா என்ற பெண் தனியார் மருத்துவ நிறுவன உபகரணம் மூலம் தான் கர்ப்பமாக இருக்கிறோமா என்பதை உறுதி செய்ய நான்கு முறை பரிசோதனை செய்துள்ளார்.

அதில் மிச்சைலா கர்ப்பமாக இருப்பதாக முடிவு வெளியான நிலையில் அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

இந்நிலையில் சில வாரங்கள் கழித்தும் மிச்சைலாவுக்கு கர்ப்பமுற்றதற்கான அறிகுறி எதுவும் தெரியாமல் இருந்துள்ளது.

இதையடுத்து ஸ்கேன் எடுத்து பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் மிச்சைலா கர்ப்பமாகவே இல்லை என தெரியவந்தது.

அப்போது தான் உபகரணம் மூலம் எடுத்த பரிசோதனை முடிவு பொய் என்பதை மிச்சைலா உணர்ந்தார்.

இது குறித்து மிச்சைலா கூறுகையில், என் முதல் குழந்தையை வயிற்றில் சுமப்பதாக நினைத்து நானும் குடும்பத்தாரும் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம்.

ஆனால் அது பொய் என தெரிந்ததும் உடைந்து போய் விட்டோம் என கூறியுள்ளார்.

இதனிடையில் மிச்சைலா கர்ப்பமுற்றிருப்பதாக தெரிவித்த கருவியின் நிறுவனம் சார்பில் பேசிய செய்தி தொடர்பாளர், எங்கள் நிறுவனத்துடன் மிச்சைலாவுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்துக்காக வருந்துகிறோம்.

வாடிக்கையாளர்களை எங்கள் தயாரிப்புகளை நம்பும் வகையிலும், எங்கள் கர்ப்ப பரிசோதனையை கடுமையான சட்டத்திற்கு இணங்க வைப்பதற்கும் கடுமையாக உழைத்து வருகிறோம் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்