பிரித்தானியாவில் மாற்றுத்திறனாளி பெண் மீது கொடூர தாக்குதல்! புகைப்படத்திற்காக சிறுவர்கள் செய்த கொடூரம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் மாற்று திறனாளி பெண் மீது முட்டை வீசி தாக்குதல் நடத்திய 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவின் Bury St Edmunds பகுதியில் உள்ள இருக்கை ஒன்றில் 40 வயதுள்ள மாற்று திறனாளி பெண் ஒருவர் அமர்ந்திருந்துள்ளார்.

அங்கு சுற்றி பார்க்க வந்த சிறுவர்கள் 4 பேர், திடீரென அந்த பெண் மீது இரக்கமின்றி முட்டைகள் மற்றும் மாவு தூளை வீசி எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் அந்த பெண் உடல் ரீதியாக லேசான காயமடைந்திருந்தாலும், மன ரீதியாக அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் தெரிவித்திருந்தார்.

மேலும், இந்த கொடூரமான செயல்களில் ஈடுபட்ட 17 வயதுள்ள இரண்டு சிறுவர்கள் மற்றும் 15 வயதுள்ள இரண்டு சிறுவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டதாகவும், தற்போது அவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்