நர்ஸாக நடித்து மாட்டிக்கொண்ட இளம்பெண்: உளறிக் கொட்டியதால் சிக்கி சிறைக்கு செல்கிறார்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

நர்ஸ் போல நடித்த பிரித்தானியாவின் Bristolஐச் சேர்ந்த ஒரு பெண் குளூக்கோஸ் ஏற்றும் ஊசியை எங்கே குத்த வேண்டும் என்று கேட்டதால் பிடிபட்டார்.

முன்பதாக மாரடைப்பு ஏற்பட்ட ஒருவருக்கு உதவுவதாக நினைத்து சத்தமாக “மாரடைப்பு, மாரடைப்பு” என்று கத்தி அவரையும் பிற நோயாளிகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார் அந்த பெண்.

அவர் ஒரு மருத்துவ ஊழியர் என நினைத்து அவரிடம் ஒரு குளூக்கோஸ் ஏற்றும் ஊசியைக் கொடுத்து குத்தச் சொல்ல, எங்கே குத்த வேண்டும் என அவர் கேட்க அவர் குட்டு உடைந்தது.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் இதற்கு முன்பு அவர் ஒரு டாக்டர் போல் நடித்து மருந்து சீட்டு எழுதிய உண்மையும் தெரிய வந்துள்ளது.

இன்று Cassandra Grant (39) என்ற அந்த பெண்ணுக்கு நீதிபதி நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இல்லாததை இருப்பது போல் நினைத்துக் கொண்டு செயல்படும் ஒரு மன நோய் அவருக்கு இருப்பதாக தெரிவித்த நீதிபதி, இதனால் உண்மையாகவே ஏதேனும் அவசர சூழல் ஏற்பட்டால் Cassandraவின் நடவடிக்கைகளால் பெரிய பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கும் என்றார்.

அவளால் இரண்டு பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கும் என்ற நீதிபதி, ஒன்று மருத்துவ உபகரணங்களை அவர் தவறான விதத்தில் பயன்படுத்தி அதனால் யாருக்கேனும் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம்.

இரண்டு மருத்துவம் பற்றி எதுவும் தெரியாத அவரால் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியாத ஒரு சூழல் ஏற்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

நான்காண்டுகள் சிறைத்தண்டனையுடன் Cassandraவுக்கு மன நல சிகிச்சையும் அளிக்கப்பட உள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers