தந்தையை அழைத்துப் பேச அஞ்சும் மேகன் மெர்க்கல்: வெளியான அதிர்ச்சி காரணம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

சசெக்ஸின் டச்சஸ் என அறியப்படும் மேகன் மெர்க்கல் இளவரசர் ஹரியை திருமணம் செய்து கொண்டபின்னர் இதுவரை தமது தந்தையை அழைத்துப் பேசவில்லை என கூறப்படுகிறது.

தந்தைக்கும் மகளுக்குமான உறவு இனி சரி செய்ய முடியாதபடி வெகுதூரம் விலகிச்சென்றுள்ளதாகவும் கருதப்படுகிறது.

ஆனால் தமது தந்தை மீது தமக்கு நம்பிக்கை இல்லை எனவும், தாங்கள் பேசும் விவகராத்தை அவர் பொதுவெளியில் தெரிவிக்க வாய்ப்பு உள்ளதாக அஞ்சுவதாகவும் மெர்க்கல் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

இளவரசர் ஹரி மற்றும் மேகன் மெர்க்கல் திருமணத்திற்கு முன்னரே தனியார் புகைப்பட கலைஞர்களுக்கு சாதகமாக தாமஸ் மெர்க்கல் நடந்து கொண்டதும், பிரித்தானிய அரச மரபுகளுக்கு எதிராக இளவரசர் ஹரி தொடர்பில் அரசியல் பேசியதும் பெரிதும் விவாதிக்கப்பட்ட நிலையில், தமது மகள் தம்மை புறக்கணிக்கிறார் என செய்தி ஊடகங்களுக்கு தாமஸ் மெர்க்கல் பேட்டி அளித்து வருவதும் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

தந்தை தொடர்பில் ஏற்கெனவே அறிந்து வைத்திருக்கும் மேகன் மெர்க்கல், தற்போது தந்தையின் செயற்பாடு குறித்து அஞ்சுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமது தந்தையை அழைத்து பேசினால், அந்த தகவல்களை அவர் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தவும் வாய்ப்பு இருப்பதாக மெர்க்கல் அஞ்சுகிறார்.

அமெரிக்காவில் குடியிருக்கும்போது தந்தையுடன் அதிக பாசத்தில் இருந்த மெர்க்கல், அரச குடும்பத்தில் திருமணம் செய்துகொண்டதன் பின்னர், தமது தந்தையின் தேவையற்ற நடவடிக்கைகளால் சிக்கலில் தவிப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், தனது புதிய வாழ்க்கையில் குறுக்கிடும் எந்த எதிர்மறை கருத்துக்களையும் புறந்தள்ளி புது வாழ்க்கையில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என மெர்க்கலின் தாயார் அடிக்கடி கூறி வருவதை சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers