இலங்கையில் தேனிலவு கொண்டாடிவிட்டு ஊருக்கு திரும்பிய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்: தவிக்கும் குடும்பம்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவை சேர்ந்த பெண் இலங்கையில் தேனிலவு கொண்டாடிவிட்டு சொந்தநாட்டுக்கு திரும்பிய போது திடீரென பக்கவாதம் ஏற்பட்ட நிலையில் அதிலிருந்து மெல்ல மீண்டு வருகிறார்.

சாரா ரிவீல் (27) என்ற இளம் பெண்ணுக்கு கடந்தாண்டு திருமணம் ஆன நிலையில் கணவருடன் இலங்கை மற்றும் மாலத்தீவுக்கு சென்று ஜாலியாக தேனிலவை கொண்டாடியுள்ளார்.

பின்னர் பிரித்தானியாவுக்கு திரும்பிய போது சாராவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

அவரால் கை,கால்களை அசைக்க முடியாமல் போன நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அப்போது தான் சாராவை பக்கவாதம் தாக்கியிருப்பது தெரியவந்தது.

கர்ப்பத் தடைக்காக சாரா சில மாத்திரைகளை சாப்பிட்டதும் அது ஏற்படுத்திய பக்கவிளைவுகளால் பக்கவாதம் ஏற்பட்டதும் உறுதியானது.

இதையடுத்து பல மாதங்கள் பேசமுடியாமலும், கை கால்களை அசைக்க முடியாமலும் சாரா தவித்து வந்தார்.

தொடர் சிகிச்சை காரணமாக நோயிலிருந்து மெல்ல மீண்டு வரும் சாரா எழுத, படிக்க மீண்டும் பழகி வருகிறார்.

அவர் கூறுகையில், நான் நல்ல உடல் ஆரோக்கியதுடன் தான் இருந்தேன், ஆனால் திடீரென எனக்கு பக்கவாதம் ஏற்பட்டு வாழ்க்கையையே புரட்டி போட்டுவிட்டது.

இளம் வயதிலேயே இது போன்ற நோய்கள் வரலாம் என உணர்ந்துள்ளேன், இது குறித்து பிறருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளேன் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers