இமயமலையின் 26,000 அடி உயரத்தில் மாயமான பிரித்தானியர்: 36 மணி நேரத்திற்கு பின்னர் மீட்பு

Report Print Arbin Arbin in பிரித்தானியா

இமயமலையில் மாயமான பிரித்தானிய மலையேறும் வீரரை 36 மணி நேரத்திற்கு பின்னர் ட்ரோன் விமானத்தால் உயிருடன் மீட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் திபெத்திய எல்லையில் அமைந்திருக்கும் இமயமலையில் பிரித்தானிய மலையேறுபவரான Rick Allen(65) என்பவர் பனி முகடு ஒன்றில் இருந்து தவறி விழுந்து அதன் பின்னர் மாயமானார்.

கடந்த 36 மணி நேரமாக தேடுதல் பணியில் ட்ரோன் விமானங்களை பயன்படுத்தி தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் இறந்ததாக கருதப்பட்ட ரிக் அலென், தற்போது காயங்களுடன் உயிரோடு இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர்.

ரிக் அலென் பாகிஸ்தானில் அமைந்துள்ள உலகின் 12-வது பெரிய மலை முகட்டின் மீதிருந்து கீழிறங்கி வந்துகொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

சுமார் 26,000 அடி உயரத்தில் இருந்த அவர் திடீரென்று தவறி கீழே விழுந்துள்ளார்.

இதனிடையே மலையேறும் வீரர்களுக்கான சமையற்கலைஞர் ஒருவர் தகவலறிந்து எச்சரிக்கை செய்துள்ளார்.

இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட எஞ்சிய வீரர்கள் போலந்து நாட்டவர்களான மலையேறும் வீரர்களின் ட்ரோன் விமானத்தை பயன்படுத்தி தேடுதல் பணியை துவங்கினர்.

இதில் நீண்ட 36 மணி நேர தேடுதலுக்கு பின்னர் பிரித்தானிய மலையேறும் வீரர் ரிக் அலென் உயிரோடு இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.

இதனையடுத்து ரிக் அலென் சிக்கிய பகுதிக்கு விரைந்த சிறப்பு மலையேறும் வீரர்கள் சிலர், அவரை மீட்டு வந்துள்ளனர்.

பின்னர் ஹெலிகொப்டர் பயன்படுத்தி அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கடும் பனிப்பொழிவு மிகுந்த பகுதி என்பதால் அவரது கால் விரல்கள் அனைத்தும் உறைந்துபோய் காணப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers