லண்டன் இரயில் நிலையத்தில் கெளரவிக்கப்பட்ட இங்கிலாந்து பயிற்சியாளர்: இளம் பெண் செய்த செய்த மோசமான செயல்

Report Print Santhan in பிரித்தானியா

லண்டன் இரயில் நிலையத்தில் இங்கிலாந்து அணியின் கால்பந்தாட்ட பயிற்சியாளரின் பெயர் அவரை கெளரவிக்கும் விதமாக தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த நிலையில், அதை பெண் ஒருவர் கிழித்ததால், ரசிகர்கள் பலர் ஆத்திரமடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் இங்கிலாந்து அணியை அரையிறுதி வரைக்கும் அழைத்துச் சென்ற பயிற்சியாளர் Gareth Southgate-ஐ பிரித்தானியா ரசிகர்கள் தங்கள் நாட்டு ஹீரோவாக பார்க்கின்றனர்.

28-ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றதால், நாட்டிற்கு பெருமை தேடித்தந்த Gareth Southgate-க்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.

இதனால் அவரை கெளரவிக்கும் விதமாக பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் உள்ள இரயில் நிலையத்தில் Gareth Southgate என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இரண்டு நாட்களுக்கு இது இருக்கும் எனவும், இது அவரை கெளரவப்படுத்தும் வகையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பெண் ஒருவர் இரயில் நிலையத்தில் எழுதப்பட்டிருந்த Gareth Southgate-ன் பெயரை கிழித்துள்ளார். சிரித்துக் கொண்டே அவர் கிழிப்பது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியதால், கால்பந்தாட்ட ரசிகர்கள் பலரும் ஆத்திரமடைந்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்