பிரித்தானிய சாலையில் அதிவேகமாக சென்ற இளைஞர்: நீதிமன்றம் விதித்த கடுமையான தண்டனை!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய சாலையில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிபயங்கர வேகத்தில், இரு சக்கர வாகனத்தை ஒட்டி சென்ற இளைஞருக்கு 21 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த Adam Campion (26) என்ற இளைஞர், சாலை பயணிகள் அனைவரையும் அச்சுறுத்தும் விதமாக 189 கிமீ வேகத்தில், தவறான பாதையில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்துள்ளார். மேலும் அதனை தனது செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டே ஒற்றை கையில் இருசக்கர வாகனத்தை செலுத்தியுள்ளார்.

இதனையடுத்து கடந்த 2016 செப்டம்பர் மாதம் அவரை கைது செய்த போலீசார், Hucknall-ல் உள்ள அவரது வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அவரது மடிக்கணினியிலிருந்து 100கும் மேற்பட்ட அதிர்ச்சி தரும் வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன. அவை அனைத்திலும் Adam அச்சுறுத்தும் விதத்திலே வாகனத்தை செலுத்தியுள்ளார்.

இதுதொடர்பான வழக்கின் தீர்ப்பு Nottingham Crown Court-ல் நேற்று வழங்கப்பட்டது. அதில் குற்றம்சாட்டப்பட்ட Adam-க்கு 21 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டன.

பின்னர் இதுகுறித்து பொலிஸார் Glenn Longden கூறுகையில், சட்டவிரோதமாக மற்றும் அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டுவது சமூகத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. இனி அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு இந்த தண்டனை ஒரு பாடமாக அமையும் என தெரிவித்தார்.

மேலும், கைப்பற்றப்பட்ட வீடியோக்களில் இடம் பெற்றிருக்கும் மற்ற இளைஞர்களை பற்றியும் விசாரணை நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

முன்னதாக பிரித்தானிய சாலையில், Tim Brady என்ற நபர் மட்டுமே 172கிமீ வேகத்தில் சென்று பொலிஸாரிடம் சிக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்