ஆடி காருடன் கடத்தப்பட்ட 4 வார கைக்குழந்தை: உடனடியாக குவிந்த பிரித்தானிய பொலிஸார்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் ஆடி காருடன் சேர்த்து கடத்தப்பட்ட 4 வார கைக்குழந்தையை விரைந்து செயல்பட்டு பிரித்தானிய பொலிஸார் மீட்டுள்ளனர்.

பிரித்தானியாவின் Birmingham பகுதியில் உள்ள Marie Drive அருகே, கார் திருடர்கள் இருவர், பின் இருக்கையில் அமர்ந்திருந்த 4 வார கைக்குழந்தையுடன் சேர்த்து ஆடி காரினை கடத்தியுள்ளனர். அவர்களிடம் இருந்து குழந்தையை காப்பாற்றும் முயற்சியில் அந்த தாய் ஈடுபடும் பொழுது, அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த 12 பிரித்தானிய பொலிஸார், விரைந்து செயல்பட்டு சம்பவ இடத்திலிருந்து 5 மைல் தூரத்தில் உள்ள Small Heath health centre-ல் இருந்து குழந்தையை மீட்டனர்.

பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாயுடன் குழந்தையை சேர்த்த பொலிஸார், விரைவில் குற்றவாளிகளை பிடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக காவல்துறை உயர் அதிகாரி Tony Cole கூறுகையில், கார் திருடர்கள் இருவரும் இறுதியாக Solihull பகுதியில் காருடன் சென்றதாக நம்பப்படுகிறது.

grey Audi A3 S-line, BJ66 YLV பதிவெண் கொண்ட காரை யாரேனும் பார்த்தால் உடனடியாக 101என்ற எண்ணுக்கு தகவல் கொடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்