ஹெச்.ஐ.வி இரத்தத்தால் வரையப்பட்ட இளவரசி டயானாவின் படம்: மனதை உருக்கும் காரணம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

புகழ்பெற்ற ஓவியரான Conor Collins, பிரித்தானிய இளவரசி டயானாவின் படம் ஒன்றை ஹெச்.ஐ.வி இரத்தம் மற்றும் வைர துகள்களை பயன்படுத்தி வரைந்துள்ளார்.

1987ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரித்தானிய இளவரசி டயானா, மருத்துவர்களே செய்ய தயங்கும் ஒரு காரியத்தைத் துணிந்து செய்தார்.

ஹெச்.ஐ.வி பாதித்த ஒரு மனிதனுடன் அவர் கை குலுக்கி, உலகம் ஹெச்.ஐ.வி குறித்து கொண்டிருந்த தவறான எண்ணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, அவரது பங்கிற்கு ஒரு காற்புள்ளி வைத்தார்.

தற்போது Conor Collins வரைந்த அந்த படம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

டயானா ஹெச்.ஐ.வி நோய்த்தொற்றிய ஒரு மனிதனின் கைகளைப் பற்றிக் கொண்டதைக் கண்டு உலகம் அன்று அதிர்ந்தது, என்றாலும் ஹெச்.ஐ.வி குறித்த தவறான எண்ணம் இன்னும் மாறவில்லை என்கிறார் Conor Collins.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்