விடுமுறையை கழிக்க சென்ற சிறுவன் குடும்பத்தாரின் கண்முன்னே துடிதுடித்து இறந்த பரிதாபம்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

விடுமுறையை கழிப்பதற்காக குடும்பத்துடன் படகில் பயணம் செய்த பிரித்தானிய சிறுவன், கடலில் தவறி விழுந்து குடும்பத்தாரின் கண்முன்னே உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Littlehampton பகுதியை சேர்ந்தவர் Paul Finnett (54). தனியார் எரிபொருள் நிறுவனத்தில் இயக்குனராக பணியாற்றி வரும் Paul, விடுமுறையை கழிப்பதற்காக தனது குடும்பத்துடன் அமெரிக்காவின் Houston பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

அங்கு தனது மனைவி, மற்றும் மகன்கள், Benjamin (17), Toby Finnett (15), stepbrother Kai (14) ஆகியோருடன் படகில் அதிவேகமாக பயணம் செய்துள்ளார்.

அப்பொழுது Toby எதிர்பாராத விதமாக படகில் இருந்து தவறி விழுந்துள்ளான். இதனையடுத்து உடனடியாக படகினை நிறுத்தி அவனை மீட்க போராடினர். ஆனால் துரதிஷ்டவசமாக சிறுவன் படகின் இறக்கைகளில் சிக்கி துடிதுடித்து உயிரிழந்துள்ளான்.

பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கடலோர காவல்படையினர், சந்தேகத்தின் பேரின் சிறுவனின் தந்தை Paul Finnett-ஐ கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் விசாரணையில் மோசமான வானிலையின் காரணமாகவே விபத்து ஏற்பட்டது என்பது தெரியவரவே அவரை விடுதலை செய்ததோடு, பிரித்தானிய வெளியுறவுத்துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்