சிறுவர் துன்புறுத்தல் வழக்கில் சாட்சியமளிக்க இருக்கும் பிரித்தானிய இளவரசர்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

முன்னாள் பிஷப்பான Peter Ball மீதான சிறுவர் துன்புறுத்தல் வழக்கில் பிரித்தானிய இளவரசர் சார்லஸ் இன்று சாட்சியமளிக்க இருக்கிறார்.

அவர் நேரடியாக சட்சியமளிக்கவில்லை, அவரது எழுத்துப்பூர்வ அறிக்கை நாளைய விசாரணையின்போது நீதிமன்றத்தில் வாசிக்கப்படும்.

தான் பிரித்தானிய இளவரசர் சார்லசுக்கு நெருக்கமானவர் என்று கூறிக்கொள்ளும் Peter, 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சிறையிலடைக்கப்பட்டார். 18 இளைஞர்களை 30 ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

அவரது தண்டனையில் பாதியை முடித்த பிறகு Peter சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

Peter தான் பிரித்தானிய இளவரசர் சார்லசுக்கு நெருக்கமானவர் என்று கூறியிருந்த நிலையில், ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அவருக்கு ஆதரவாக இருந்ததாக வழக்கு விசாரணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்