பிரித்தானியாவில் சில நிமிடங்களில் 1 மில்லியன் பவுண்டினை தட்டிசென்ற அதிர்ஷ்டகாரர்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானியாவை சேர்ந்த நபர் ஒருவர் சில நிமிடங்களில் தனது அதிர்ஷ்ட டிக்கெட் மூலம் 1 மில்லியன் பணத்தினை பெற்றுள்ளார்.

Lotto Millionaire Raffle என்பது பணமழை கொட்டு ஒரு விளையாட்டு ஆகும். இதில், வாங்கும் lucky dip டிக்கெட் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சில நேரங்களில் அதிர்ஷ்வசமாக லக்கி ஜாக்பாட் அடிக்கும்.

இந்த டிக்கெட் எடுத்தால், டிரா நேரம் முடியும் முன்பாக அதனை வாங்க வேண்டும். டிரா நேரம் முடிந்த பின்னர், டிக்கெட் எடுத்த நபருக்கு ஜாக்பாட் அடித்திருந்தாலும் கூட அவருக்கு பணம் கொடுக்கப்படமாட்டாது.

இந்நிலையில், Arron Walshaw என்பவர் தான் வாங்கிய டிக்கெட்டின் டிரா முடிய சில நிமிடங்களே இருந்த நிலையில், வாடிக்கையாளர்களுடன் சேர்ந்து வரிசையில் நின்றுகொண்டிருந்துள்ளார். ஆனால் வரிசையில் காத்திருந்த வாடிக்கையாளர் ஒருவர் இவருக்கு வழிவிட்டதால், டிராவை சரிபார்த்த Walshaw இன்ப அதிர்ச்சி. அவர் வாங்கிய டிக்கெட்டுக்கு 1 மில்லியன் பவுண்ட்ஸ் ஜாக்பாட் அடித்திருந்தது.

வாடிக்கையாளர் இவருக்கு வழிவிடாமல் போயிருந்தால் இவருக்கு அந்த பணம் கிடைத்திருக்காது. தனக்கு கிடைத்த பணத்தினை வைத்து தனது காதலியை திருமணம் செய்துகொண்டு, கார் மற்றும் சொகுசு வீடு வாங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்