லண்டனில் பட்டப்பகலில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த இளைஞர்: குவிந்த பொதுமக்களால் பரபரப்பு

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானிய தலைநகர் லண்டனில் அமைந்துள்ள பெத்னல் கிரீன் சாலையில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் கத்தியால் கழுத்தில் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெத்னல் கிரீன் சாலையில் நடந்த குறித்த சம்பவம் தொடர்பாக மருத்துவ உதவிக்குழுவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்த மருத்துவ குழுவினர் மற்றும் பொலிசார் குறித்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அவரது உடல்நிலை தொடர்பில் உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை மருத்துவமனை வட்டாரத்தில் இருந்து வெளியிடப்படவில்லை.

தாக்கப்பட்ட இளைஞரின் வயது 16 எனவும், தாக்கியவர்கள் தொடர்பில் தகவல் எதுவும் இல்லை என கூறப்படுகிறது.

இளைஞர் ஒருவர் ரத்தவெள்ளத்தில் சாலையோரத்தில் கிடப்பதை அறிந்த பொதுமக்கள் பொலிசாருக்கும் மருத்துவமனைக்கும் தகவல் அளித்துள்ளனர்.

லண்டன் மாநகரத்தில் தொடரும் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துபோயுள்ளனர்.

இந்த விவகாரத்தில் வழக்கு பதிந்துள்ள பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்