பிரித்தானியாவில் பெற்றோரின் கவனக்குறைவால் 6 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் பெற்றோரின் கவனக்குறைவால் 6 வயது சிறுவன் ஜன்னலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Nottingham பகுதியில் கடந்த 17-ம் தேதியன்று, வீட்டின் ஜன்னலிலிருந்து 6 வயது சிறுவன் தவறி விழுந்துவிட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் உதவியாளர்கள், சுய நினைவற்று மயங்கிய நிலையில் கிடந்த சிறுவனை மீட்டு Queens Medical Centre-ல் அனுமதித்தனர்.

ஆனால் அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் சிறுவன் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சிறுவனின் மரணம் ஒரு விபத்து என கூறி வழக்கை முடித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்