குழந்தை பெற்ற 5 மாதத்திலே தூக்கில் தொங்கிய தாய்: விசாரணையில் வெளியான தகவல்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் குழந்தை பெற்ற 5 மாதத்திலே ஏற்பட்டஅதிகளவிலான மனஅழுத்தம் காரணமாக தாய் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Halifax அருகே Pellon பகுதியில் வசித்து வருபவர்கள் Imran Siddique - Aimmie-Marie Hargreaves (22) தம்பதியினர். இவர்களுக்கு Freddie மற்றும் Theo என்ற இரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இவர்கள் கடந்த மே 20 ம் தேதி பூங்கா ஒன்றிற்கு சென்று விட்டு வீடு திரும்பும் பொழுது, Aimmie தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டார்.

பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பொலிஸார், Aimmie குடும்பத்தார் மற்றும் அவரது கணவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் பொலிஸார் விசாரணையில் பேசிய Imran, எங்களுக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு முதல் குழந்தை பிறந்தது. அன்றிலிருந்தே Aimmie மனஅழுத்ததில் இருந்தார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதோடு, மாத்திரைகளையும் உண்டு வந்தார்.

பின்னர் கடந்த டிசம்பர் 2017-ம் ஆண்டு மீண்டும் ஒரு குழந்தை பிறந்தது. அப்பொழுது முன்பு இருந்ததை விட அதிகமான மனஅழுத்ததில் Aimmie காணப்பட்டார். அடிக்கடி தனியாக அழுது கொண்டிருப்பார்.

Aimmie இறப்பதற்கு முந்தைய நாள், நான்கு பேரும் சேர்ந்து Shibden பூங்காவிற்கு சென்றிருந்தோம்.

அங்கு Aimmie மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். அப்பொழுது நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக Aimmie-யுடன் குழந்தைகளை விட்டுவிட்டு நான் அங்கிருந்து சென்றுவிட்டேன். பின்னர் திரும்பி வந்து பார்க்கும்பொழுது, வீட்டில் தூக்கில் தொங்கியபடி இருந்தார் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது தாயார் Dawn Hargreaves கூறுகையில், Aimmie பள்ளி பருவத்தில் இருந்தே நன்கு படிக்க கூடியவள். மருத்துவ பணியில் பணியாற்ற அதிகம் விரும்பினால். குழந்தைகளை தவிக்க விட்டு சென்றுள்ள அவளது இறப்பு மிகவும் சோகமான ஒரு முடிவு என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் வழக்கினை விசாரித்து வந்த பொலிஸார் Aimmie-ன் இறப்பு தற்செயலானது என கூறி வழக்கினை முடித்து வைத்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்