பிரித்தானியாவின் அரசியாக 9 நாட்கள் மட்டுமே இருந்தவர் யார் தெரியுமா?

Report Print Kabilan in பிரித்தானியா

பிரித்தானிய அரச வரலாற்றில் 9 நாட்கள் மட்டுமே அரசியாக இருந்தவர் ஜேன் கிரே ஆவார்.

பிரித்தானியாவில் 1537ஆம் ஆண்டு அரச குடும்பத்தில் பிறந்தவர் ஜேன் கிரே. இவருக்கு 17 வயது இருக்கும் போது, பிரித்தானியாவின் அரசராக இருந்த 6வது எட்வர்டு பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, 1553ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10ஆம் திகதி மிக இளம் வயதில் ஜேன் கிரே பிரித்தானியாவின் அரசியாக பதவியேற்றார்.

ஆனால், அவர் மீது ராஜதுரோக குற்றம் சுமத்தப்பட்டதால் பதவியேற்ற 9 நாட்களிலேயே அவரது பதவி பறிக்கப்பட்டது. அதனால், ஜேன் லண்டன் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் ஜேன் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டதால், 1554ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் திகதி அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இதில் துரதிர்ஷ்டவசமான விடயம் என்னவென்றால், ஜேனின் கணவரின் மரண தண்டனையும் அதே நாளில் நிறைவேற்றப்பட்டது தான்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்