மருமகளுடன் முறை தவறிய உறவு வைத்த மாமனார்! கதறும் மகன்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

45 ஆண்டுகளாக உடன் வாழ்ந்த மனைவிக்கு தனது மகனின் மனைவியுடனான தவறான உறவு தெரியவந்ததால் அவளைக் கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார் பிரித்தானியாவைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் Stephen Searle.

இன்று அவருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பளித்த நீதிபதி “உங்கள் செயல்கள் தாங்க இயலாத வலியை ஏற்படுத்தியுள்ளதோடு, உங்கள் குடும்பம் முழுவதையும் சிதறடித்துவிட்டது” என்றார்.

முன்னாள் ராணுவ வீரரும் முன்னாள் கவுன்சிலருமான Stephen Searle தனது மகனின் மனைவியான Anastasiaவின் பாட்டி உடல் நலமில்லாமல் இருக்கும்போது அவரைப் பார்ப்பதற்காக செல்லும்போது Anastasiaவை தவறான உறவுக்கு தூண்டியிருக்கிறார்.

நீண்ட கால தொந்தரவால் தனது கணவரின் தந்தையின் ஆசைக்கு இணங்கியிருக்கிறார் Anastasia.

ஒரு நாள் இந்த முறை தவறிய உறவு Stephenஇன் மனைவியான Anneக்கு தெரிய வந்திருக்கிறது.

அடிக்கடி வீட்டில் சண்டை ஏற்பட்டாலும் தன்னால் இனி வெளியே சென்று இன்னொரு வாழ்வைத் தொடங்க இயலாது என தனது நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார் Anne.

ஒரு நாள் இருவருக்கும் ஏற்பட்ட சண்டையின்போது வெறுப்பினால் ஒரு கத்தியை எடுத்து Stephenஐக் குத்த முயன்றபோது அவரைத் தடுத்து தான் ராணுவத்தில் பயின்ற முறையைப் பயன்படுத்தி Anneயை செயலிழக்கச் செய்து கழுத்தை நெறித்துக் கொன்றிருக்கிறார்.

மனைவி இறந்ததும் பொலிசுக்கு போன் செய்த Stephen, தனது மனைவியைக் கொன்றுவிட்டதாக தெரிவித்திருக்கிறார்.

தற்போது இந்த வழக்கில் நீதிபதி Stephenக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறார்.

இந்நிலையில் அவரது மகனான Gary, தான் தனது மனைவியை மன்னித்து விட்டதாகவும் ஆனால் தான் ஹீரோவாக மதித்த தனது தந்தையை மட்டும் தன்னால் மன்னிக்கவே முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்