உலகக்கோப்பையில் பெருமை சேர்த்த இங்கிலாந்து பயிற்சியாளர்-பிரான்ஸ் வீரர்கள்: கொடுக்கப்பட்ட நெகிழ்ச்சியான கெளரவம்

Report Print Santhan in பிரித்தானியா

உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் இங்கிலாந்து அணியை அரையிறுதி வரைக்கும் அழைத்துச் சென்ற இங்கிலாந்து பயிற்சியாளரை கெளரவிக்கும் வகையில், லண்டனில் உள்ள இரயில் நிலையத்தில் அவரது பெயர் தற்சமயம் வைக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் நடைபெற்ற 21-வது பிபா உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் இங்கிலாந்து அணி 1990-ஆம் ஆண்டிற்கு பிறகு, இந்தாண்டு அரையிறுதி வரை முன்னேறியது.

மற்ற அணிக்கு கடும் சவாலாக இருந்த இங்கிலாந்து அணியை, பிரித்தானியா இளவரசர் வெகுவாக பாரட்டினார். அதுமட்டுமின்றி அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியுற்ற போதும், அந்நாட்டு பயிற்சியாளரை இங்கிலாந்து ரசிகர்கள் ரஷ்யா மைதானத்தில் வைத்தே பாராட்டினர்.

அது தொடர்பான வீடியோவும் இணையதளங்களில் வைரலாக பரவியது.

இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி வரைக்கும் முன்னேறிய இங்கிலாந்து அணி வீரர்கள் நேற்று நாடு திரும்பினர். இதையடுத்து பிரித்தானியாவின் தலைநகர் லண்டனின் Enfield பகுதியில் உள்ள Southgate இரயில் நிலையத்திற்கு இங்கிலாந்து அணியின் பயிற்சியாளரான Gareth Southgate பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதை அவரை கெளரவிக்கும் விதமாக வைக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு நாட்களுக்கு மட்டுமே பெயர் மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இரயில் நிலையத்தில் Gareth Southgate பெயர் வைக்கப்பட்டுள்ளதால், பிரித்தானியா கால்பந்தாட்ட ரசிகர்கள், அவர் பெயர் இருக்கும் இடத்திற்கு அருகில் சென்று செல்பி எடுத்து வருகின்றனர்.

மேலும் இதே போன்று உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று பிரான்ஸ் அணிக்கு பெருமை தேடித்தந்த பிரான்ஸ் வீரர்களின் பெயர்களும், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள 6 இரயில் நிலையங்களில் தற்சமயத்திற்காக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதில் பிரான்ஸ் அணியின் கோல் கீப்பர் Victor Hugo Lloris மற்றும் பிரான்ஸ் அணியின் தலைவர் Hugo Lloris போன்ற வீரர்களின் பெயர்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers