பிரித்தானியா இளவரசி மேகன் மெர்க்கலின் தந்தை வெளியிட்ட உருக்கமான தகவல்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவியும் தனது மகளுமான மேகன் மெர்க்கலைப் பார்க்கப் போவதாக தாமஸ் மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

என்னை அழைத்தாலும் சரி, அழைக்காவிட்டாலும் சரி, நான் பிரித்தானியாவுக்கு சென்று எனது மகளைப் பார்க்கத்தான் போகிறேன் என்று மேகன் மெர்க்கலின் தந்தை தாமஸ் மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

தாமஸின் மகளான மேகன் பிரித்தானிய இளவரசர் ஹரியுடன் நிச்சயம் செய்யப்பட்டதிலிருந்தே அவருக்கும் அரண்மனைக்குமான உறவில் குளறுபடிகள் ஏற்பட்டன.

அது தாமஸ் தனது மகளின் திருமணத்திற்கு செல்லாதது வரைக்கும் சென்றது. இந்நிலையில் அவர் தனது மகளைப் பார்ப்பதற்காக பிரித்தானியாவுக்கு செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மகாராணியாரைப் பார்ப்பதற்கும் ஆசைதான் என்று தெரிவித்துள்ள தாமஸ் மெர்க்கல், ஆனால் தான் ஒதுக்கப்படுவேனோ என பயப்படுவதாகவும் தெரிவித்தார்.

தனது மகள் ராஜ குடும்பத்துடன் ஒத்துப்போக முயற்சி செய்வதைப் பார்க்கும்போது தனக்கு கவலையாக இருப்பதாகத் தெரிவித்துள்ள தாமஸ் அவரது மகளின் முகத்தில் வலியுடன் கூடிய சிரிப்பு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers