குழந்தையின் ஸ்கேன் புகைப்படத்தில் தெரிந்த இறந்த தாத்தாவின் முகம்: அடுத்த நிகழ்ந்த அதிசயம்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவை சேர்ந்த குழந்தைக்கு மூளையுறை அழற்சி நோய் இருந்த நிலையில் அதன் மூளையை படம் பிடித்த ஸ்கேனில் தாத்தாவின் முகம் தெரிந்ததாக குழந்தையின் தாய் கூறியுள்ளார்.

டேன் குர்ரான் - ஜிம்மா ஹுஜஸ் தம்பதிக்கு மைஜீ (7) என்ற மகளும் வின்னி என்ற 22 மாத ஆண் குழந்தையும் உள்ளது.

வின்னி பிறந்த பத்து வாரத்தில் meningitis எனப்படும் மூளையுறை அழற்சி நோய் ஏற்பட்டுள்ளது.

இதற்கான சிகிச்சை வின்னிக்கு மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் அவன் மூளை ஸ்கேன் எடுக்கப்பட்டது.

அந்த ஸ்கேனை பார்த்து ஜிம்மா ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்.

காரணம் அதில் ஜிம்மாவின் மாமனாரான ஐயன் முகம் போன்ற உருவம் அவருக்கு தெரிந்துள்ளது.

ஐயன் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னரே மாரடைப்பால் இறந்துவிட்டார்.

இப்படியிருக்க அவர் தான் தன் குழந்தையின் நோயை கண்டறிந்து அவனை காப்பாற்றி வருவதாக ஜிம்மா நம்புகிறார்.

இது குறித்து ஜிம்மா தனது கணவர் டேன் மற்றும் மாமியார் ஜோ-விடமும் கூறியுள்ளார்.

முதலில் இதை ஏற்காத இருவரும் பின்னர் புகைப்படத்தை பார்த்து ஏற்று கொண்டுள்ளனர்.

இது குறித்து பேசிய ஜிம்மா, எனக்கு 2015-ல் கருக்கலைப்பு ஏற்பட்டு பின்னர் தான் வின்னி வயிற்றில் உருவானான்.

அப்போதிலிருந்து பல சமயங்களில் என் மாமனார் ஐயன் அவனை காப்பாற்றினார் என நான் நம்புகிறேன்.

அதனால் தான் அவனுக்கு தாத்தா பெயரையும் சேர்த்து வின்னி ஐயன் என பெயர் வைத்துள்ளோம்.

ஸ்கேனில் தெரிந்தது ஐயன் முகம் என நாங்கள் நம்புகிறோம், அவரால் தான் வின்னியின்பார்த்து கொள்கிறார் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...