கர்ப்பமுற்றதே தெரியாமல் இரட்டைக் குழந்தை பெற்ற பிரித்தானிய பெண்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவின் Staffordshireஐச் சேர்ந்த ஒரு பெண் தான் கர்ப்பமுற்றதே தெரியாமல் இரட்டைக் குழந்தை பெற்றெடுத்த ஆச்சரிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

Beth Bamford (21), ஒரு நாள் வயிற்றுவலி ஏற்படவே டாய்லெட்டிற்கு சென்றிருக்கிறார்.

அங்கு அவருக்கு திடீரென குழந்தை பிறக்கவே அதிர்ச்சியடைந்த Beth ஆம்புலன்சுக்கு போன் செய்திருக்கிறார்.

தொப்புள் கொடி வெளியே வர வேண்டும் என்பதால் முயற்சி செய்யச் சொல்லியிருக்கிறார்கள் மருத்துவ உதவி குழுவினர்.

அவர்கள் கூறியது போலவே Beth செய்ய அடுத்த குழந்தை பிறந்திருக்கிறது. தான் கர்ப்பமுற்றதே தெரியாமல் இருந்ததால் திடீரென குழந்தைகள் பிறந்ததால் அதிர்ச்சியடைந்தார் Beth.

தனக்கு உடல் நலமில்லை என கருதி பல முறை மருத்துவர்களிடம் சென்றபோதும் மருத்துவர்களோ, அவரோ Beth Bamford கர்ப்பமுற்றிருப்பதைக் கண்டுபிடிக்கவே இல்லை.

தான் சற்று குண்டாக இருப்பதாகவே Beth Bamford நினைத்திருக்கிறார். இதற்கிடையில் ஏதோ சத்தம் கேட்டு வந்து பார்த்த Bethஇன் கணவனான Andy, தனது தாயாரிடம் சென்று, Beth பாத்ரூமில் இரண்டு குழந்தைகளுடன் இருக்கிறாள் என்று கூற, அவரோ இவனுக்கு என்ன ஆகி விட்டது, இவர்களுக்குதான் இரண்டு குழந்தைகள் இருப்பது எல்லோருக்கும் தெரியுமே என்று நினைத்தது இன்னொரு வேடிக்கை.

திடீரென குடும்பத்தில் இரண்டு உறுப்பினர்கள் சேர்ந்தது அதிர்ச்சிதான் என்றாலும் தங்கள் குழந்தைகளுக்காக மகிழ்ச்சியடைவதாக Beth தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...