இங்கிலாந்து வெற்றி பெறும்: பொய்யாக கணித்த மீனை கொன்ற இங்கிலாந்து ரசிகர்கள்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை 2- 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய குரோஷியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் குரோஷியா முதல் முறையாக நுழைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தின் தோல்வியால் துவண்டுபோன ரசிகர்கள் மைதானத்தில் வைத்து ஆர்ப்பாட்டம் செய்து தங்கள் கவலையை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில், அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெறும் என கணித்த மீனை ரசிகர்கள் மைதானத்தில் தூங்கி எறிந்ததில் அது இறந்துபோனது. கணித்துக்கூறிய மீனை தண்ணீர் நிரப்பப்பட்ட பாக்கெட்டில் வைத்துக்கொண்டு ரசிகர்கள் போட்டியை ரசித்துள்ளனர்.

ஆனால், இங்கிலாந்து தோல்வியடைந்ததால் கோபம் கொண்ட ரசிகர்கள், இந்த மீனின் கணிப்பு பொய்யாகிவிட்டது என மீனை தூக்கி எறிந்து கொன்றுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...