பிரித்தானியாவில் பள்ளி மாணவர்கள் சென்ற வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து

Report Print Vijay Amburore in பிரித்தானியா
124Shares
124Shares
lankasrimarket.com

பிரித்தானியாவில் வேகமாக சென்று கொண்டிருந்த இரட்டை அடுக்கு கொண்ட இரண்டு பள்ளி வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில், 12 மாணவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பிரித்தானியாவின் Northamptonshire பகுதியில் இரட்டை அடுக்குகளை கொண்ட இரண்டு பள்ளி வாகனங்கள் மாணவர்களை ஏற்றி கொண்டு Rothwell-ல் இருந்து Desborough நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு பேருந்துகளும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் 27 மாணவர்களுக்கு காயமடைந்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், விபத்தில் லேசான காயங்களுடன் சிக்கிய மாணவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அதேசமயம் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 12 மாணவர்களில் 8 மாணவர்களை அவசர ஊர்தியில் மருத்துவமனைக்கும், மற்ற மாணவர்களை சம்மந்தப்பட்டோரின் பெற்றோர்களுடனும் அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட வாகன ஓட்டுனரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்