சர்ச்சையே உன் பெயர்தான் மேகன் மெர்க்கலா? இம்முறை சர்வதேச சர்ச்சையில் சிக்கினார்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
176Shares
176Shares
lankasrimarket.com

மேகன் மெர்க்கல் என்றாலே சர்ச்சை என்றாகி விட்டது என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மெர்க்கல்.

வழக்கமாக உள்ளூரில்தான் சர்ச்சையில் சிக்குவார், இம்முறை சரவதேச சர்ச்சை ஒன்றில் சிக்கியிருக்கிறார் மேகன்.

பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவியான மேகன் மெர்க்கலும் அரசுமுறைப்பயணமாக அயர்லாந்துக்கு சென்றுள்ள நிலையில் டப்ளினில் Catherine Noone என்னும் அரசியல்வாதியுடன் பேசிக்கொண்டிருந்த மேகன் வெளியிட்ட ஒரு கருத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Catherine Noone வெளியிட்ட ட்வீட் ஒன்றில் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்குவது குறித்த சமீபத்திய வாக்குப்பதிவு ஒன்றின் முடிவுடன் தான் ஒத்துப்போவதாக மேகன் தெரிவித்ததாக தெரிவித்திருந்தார்.

பின்னர் அவசர அவசரமாக அந்த ட்வீட்டை நீக்கிய Catherine Noone, தாங்கள் சாதாரணமாகத்தான் பேசிக்கொண்டிருந்ததாகவும், அப்போது மேகன் அரசியல் ரீதியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்று மறுப்பும் தெரிவித்திருந்தார்.

17ஆம் நூற்றாண்டு முதல் ராஜ குடும்பத்தார் அரசியல் ரீதியாக கருத்துகளை பகிர்ந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்