170 அழுகிய விலங்குகளுக்கு நடுவில் வாழ்ந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் அளித்த தீர்ப்பு

Report Print Balamanuvelan in பிரித்தானியா
290Shares
290Shares
lankasrimarket.com

170 அழுகிய விலங்குகளுக்கு நடுவில் வாழ்ந்த பிரித்தானிய பெண் ஒருவருக்கு வாழ்நாள் முழுவதும் செல்லப் பிராணிகளை வைத்திருக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட வீட்டிலிருந்து வெளியேறிய சில பன்றிகள் குறித்து பொலிசார் கொடுத்த தகவலின்பேரில் விலங்குகள் வதை தடுப்பு ஆய்வாளரான Kate Burris அவற்றை மீட்டு Leicestershireஇலுள்ள அவற்றின் சொந்தக்காரராகிய Maxine Cammock என்னும் பெண்ணின் வீட்டில் ஒப்படைக்கச் சென்றபோது அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சியடையச் செய்தது.

அந்த வீடு முழுவதும் இறந்து அழுகிப்போன நிலையில் பன்றிகள், நாய்கள் மற்றும் கோழிகள் நிறைந்து கிடந்தன.

இதுபோக சில நாய்கள் மோசமான நிலையிலுள்ள கூண்டுகளிலும் அடைக்கப்பட்டிருந்தன, அவற்றில் இரண்டும் இறந்திருந்தன.

இன்னொரு இடத்தில் வைக்கப்பட்டிருந்த பக்கெட்டில் இருந்த எலி விஷத்தைத் தின்று இறந்திருந்தது.

அது விஷத்தைத் தின்றதும் அதை விலங்குகள் நல மருத்துவரிடம் அழைத்துச் செல்லாமல் Cammock அதைக் கூண்டில் அடைத்திருந்தார்.

மொத்தத்தில் 25 விலங்குகள் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டன. மேலும் தலைகீழாக கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைக்கப்பட்டு இறந்த பல விலங்குகளும் பறவைகளும் விலங்குகளும் அவரது வீட்டுக்குள் கண்டெடுக்கப்பட்டன.

விலங்குகள் நல சட்டம் 2006க்கு எதிராக நடந்து கொண்டதற்காக Cammockக்கு நீதிமன்றம் தண்டனை விதித்தது.

வாழ்நாள் முழுதும் அவர் செல்லப்பிராணிகள் வைத்துக் கொள்ள தடை விதிக்கப்பட்டதோடு, 24 மாதங்கள் சமூக சேவை செய்ய வேண்டும் என்றும், 30 நாட்கள் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்