பெற்ற தந்தையை கொன்று புதைத்த மகள்: 12 ஆண்டுகள் கழித்து வெளிச்சத்துக்கு வந்த உண்மை

Report Print Raju Raju in பிரித்தானியா
183Shares
183Shares
lankasrimarket.com

பிரித்தானியாவில் தந்தையை மகள் ஒருவர் 12 ஆண்டுகளுக்கு முன்னர் கொன்று வீட்டில் புதைத்த நிலையில் சமீபத்தில் காவல் நிலையம் சென்று சரணடைந்துள்ளார்.

ஸ்டாக்போர்ட் நகரை சேர்ந்தவர் பார்பரா கூம்பீஸ் (63), இவர் ஆறு மாதங்களுக்கு முன்னர் காவல் நிலையத்துக்கு சென்றுள்ளார்.

அங்கு தனது தந்தையான கெனித் கூம்பீஸை கடந்த 2006 ஆம் ஆண்டு கொலை செய்து தனது வீட்டு பின்பக்கம் உள்ள தோட்டத்தில் புதைத்து விட்டதாக கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பொலிசார் பார்பரா வீட்டு தோட்டத்தில் தோண்டிய நிலையில் கெனித் சடலத்தை எலும்புக்கூடாக கண்டெடுத்தனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட பார்பரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அங்கு தனது குற்றத்தை ஒப்பு கொண்ட பார்பரா தனது தந்தை கெனித்தால் தான் கொடுமைகளை அனுபவித்ததாக கூறியுள்ளார்.

மேலும் தந்தை தன்னிடம் மிகவும் கண்டிப்பான முறையில் நடந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.

இதனிடையில் பார்பராவுக்கான தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்படவுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்