மகாத்மா காந்தி கொடுத்த திருமண பரிசை பிரதமர் மோடிக்கு பரிசளித்த பிரித்தானிய ராணி!

Report Print Vijay Amburore in பிரித்தானியா
326Shares
326Shares
lankasrimarket.com

தனது திருமணத்திற்கு மகாத்மா காந்தி பரிசளித்த கைத்தறி துண்டினை, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசளித்து பிரித்தானிய ராணி எலிசபெத் அதிர்ச்சி கொடுத்ததாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்,

மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அரசுமுறை பயணமாக பிரித்தானியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

அங்கு வாழும் இந்தியர்கள் பலரையும் சந்தித்து பேசி வரும் அவர், கடந்த ஏப்ரல் 18-ம் தேதி பிரித்தானிய மகாராணியை, பிரதமர் மோடி சந்தித்தது குறித்து பேசினார்.

அப்பொழுது பேசுகையில், இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் 3 மாதங்கள் கழித்து, அதாவது கடந்த 1947-ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் திருமணம் நடைபெற்றது. அவருக்கு திருமண பரிசாக மகாத்மா காந்தி, தனது கையால் நெய்த கைத்தறி துண்டு ஒன்றினை பரிசளித்துள்ளார்.

அந்த துண்டினை இத்தனை நாட்களாக பத்திரமாக வைத்திருந்த, ராணி தற்போது பிரமர் மோடிக்கு அதனை பரிசாக அளித்திருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்