நெருக்கடியில் பிரித்தானியா: புதிய வெளிவிவகாரத்துறை அமைச்சர் நியமனம்

Report Print Fathima Fathima in பிரித்தானியா
203Shares
203Shares
lankasrimarket.com

Brexit விவகாரத்தில் ராஜினாமா செய்த வெளிவிவகாரத்துறை அமைச்சர் போரிஸ் ஜான்சனுக்கு பதிலாக ஜெரேமே ஹண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக பிரித்தானியா விலகுவதற்கான செயல்பாடுகளை கவனித்து வந்த பிரெக்ஸிட் செயலாளர் டேவிட் டேவிஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மேலும் குறித்த விடயங்களை கையாள தான் சரியான நபர் இல்லை என்றும், பிரித்தானியா எளிதாக விட்டுக்கொடுப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

இவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட பிரதமர் தெரேசா மே, டொமினிக் ராப்பை நியமித்தார், இதனை தொடர்ந்து பிரித்தானியா வெளிவிகாரத்துறை அமைச்சர் போரிஸ் ஜான்சன் பதவி விலகினார்.

இந்நிலையில் புதிய அமைச்சராக ஜெரேமே ஹண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்