குட்டி இளவரசரின் பெயர் சூட்டும் விழாவில் பரிமாறப்பட்ட கேட் - வில்லியம் தம்பதியின் திருமண கேக்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
323Shares
323Shares
lankasrimarket.com

பிரித்தானிய குட்டி இளவரசரின் பெயர் சூட்டு விழாவில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு கேட் - வில்லியம் தம்பதியினரின் திருமண கேக்கை பரிமாறியுள்ளனர்.

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் திருமண விழாவில் 8 அடுக்கு கேக் ஒன்று சிறப்பு சேர்த்தது.

அந்த கேக்கின் ஒரு அடுக்கை தற்போது குட்டி இளவரசர் லூயிசின் பெயர் சூட்டு விழாவில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு பரிமாறியுள்ளனர்.

மட்டுமின்றி இளவரசர் ஜோர்ஜ் மற்றும் சார்லெட்டுக்கும் அந்த கேக்கின் ஒருபகுதியை பரிமாறியுள்ளனர்.

இளவரசர் வில்லியம் தம்பதியினரின் திருமணம் முடிந்த பின்னர் அந்த கேக்கானது பதப்படுத்தி பாதுகாத்து வருகின்றனர்.

பிரித்தானிய அரச குடும்பத்தில் திருமண கேக்கின் ஒருபகுதியை தங்கள் முதல் குழந்தையின் பெயர் சூட்டு விழாவில் பரிமாறுவதை பரம்பரை பரம்பரையாக செய்து வருகின்றனர்.

ஆனால் இளவரசர் வில்லியம் தம்பதி தங்களது திருமண கேக்கினை மூன்றாவது குழந்தையின் பெயர் சூட்டும் விழாவிலும் பரிமாறும் அளவுக்கு பாதுகாத்து வருகின்றனர்.

பெயர் சூட்டு விழாவின் ஒருபகுதியாக சிறப்பு விருந்தினர்களுக்கு தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதில் குறிப்பிட்ட முக்கியஸ்தர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு மட்டும் குறித்த கேக் பரிமாறப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்