லண்டனில் பட்டப்பகலில் 51 வயது பெண்மணிக்கு நேர்ந்த துயரம்: பதற வைக்கும் வீடியோ காட்சிகள்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
1485Shares
1485Shares
lankasrimarket.com

பிரித்தானிய தலைநகர் லண்டனில் 51 வயது கார் பயணி மீது மர்ம நபர் சரமாரியா துப்பாக்கியால் சுட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லண்டன் நகரின் ப்ரெண்ட் பகுதியில் குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பான அதிர்ச்சி தரும் காணொளி காட்சிகள் வெளியாகி பொதுமக்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

காரில் பயணம் செய்த 51 வயது பெண் பயணி மீது மர்ம நபர் 3 முறை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

முதல் தோட்டா காரின் ஜன்னலை துளைத்துள்ளது. எஞ்சிய இரண்டு தோட்டாக்களும் காரில் பாய்ந்துள்ளது.

ஆனால் இந்த கொலைவெறி தாக்குதலில் அந்த பெண்மணி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

மட்டுமின்றி பதற்றத்தில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என தெரியாமல் அவர் உறைந்துபோய் நின்றுள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சிறப்பு பொலிசார் மற்றும் மோப்ப நாய்கள், அந்த பகுதியில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் கொலை முயற்சி தொடர்பில் வழக்கு பதிந்து விசாரித்து வருவதாகவும், குறித்த கண்காணிப்பு கமெரா காட்சிகளை வெளியிட்டு குறித்த மர்ம நபர் தொடர்பில் தகவல் சேகரித்து வருகின்றனர்.

கடந்த மே 14 ஆம் திகதி நடந்த இச்சம்பவத்தில் பொலிசார் 3 தோட்டாக்களின் மிச்சங்களை கைப்பற்றியுள்ளனர்.

கொலை முயற்சியில் ஈடுபட்ட பின்னர் குறித்த நபர் Queensbury ரயில் நிலையம் நோக்கி காரில் விரைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அந்த நபர் கருப்பினத்தவர் எனவும், சம்பவத்தின்போது முகம் மறைக்கப்பட்டு இருந்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்