பிரசவத்தின்போது இறந்த காதல் மனைவி.. 3 குழந்தைகளுடன் கலங்கி நிற்கும் கணவன்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா
518Shares
518Shares
lankasrimarket.com

பிரித்தானியாவில், பிரசவத்தின்போது காதல் மனைவி இறந்ததால் மூன்று குழந்தைகளையும் வைத்துக்கொண்டு தினம்தோறும் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து அவரது கணவன் Brett Parry விவரித்துள்ளார்.

பிரித்தானியாவை சேர்ந்த Brett Parry - Becky என்ற தம்பதியினர் சிறுவயதிலிருந்தே நல்ல நண்பர்களாக இருந்து வந்த இருவரும், இளமை காலத்திலே சேர்ந்து வாழ ஆரம்பித்துள்ளனர். 32 வயதாகும் Becky கடந்த 9 மாதங்களுக்கு முன்பு துபாய் சென்றிருக்கும்போது கர்ப்பம் தரித்துள்ளார்.

இதுகுறித்து அவரது கணவர் கூறுகையில், மூன்றாவது குழந்தையை வயிற்றியில் சுமத்திருந்த Becky நல்ல மனதைரியம் உடையவள். 5 மாதங்களுக்கு முன்பு சிசேரியன் செய்வதற்காக அவளை மருத்துவமனையில் அனுமதித்தோம். சிரித்த முகத்துடனே உள்ளே சென்றவளுக்கு அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளதாக மருத்துவர்கள் கூறினார்.

உடனடியாக மகிழ்ச்சியில் விரைந்து சென்று அவளை பார்த்தேன். அவளும் என்னை பார்த்து மிகவும் அழகாக சிரித்தாள். ஆனால் அந்த சிரிப்பு நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அடுத்த சில நிமிடங்களில் அவளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

உடனடியாக உள்ளே நுழைந்த சில மருத்துவர்கள் , Becky-யை தீவிர சிகிச்சை பிரிவிற்கு அழைத்து சென்றனர். என்னை வெளியேறுமாறும் அறிவுறுத்தினார். பின்னர் வெளியில் வந்த மருத்துவர், Becky கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனால் பெரும் அதிர்ச்சியில் உறைந்திருந்த எனக்கு பெரும் சோகத்தை தரும் அளவிற்கு அடுத்த மூன்று நாட்களில் மற்றொரு செய்தியும் வந்தது. அது Becky இறந்து விட்டாள் என்ற செய்தி.

எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. Becky இறந்து இன்றுடன் 5 மாதங்கள் ஆகிறது. அவள் இல்லாத இந்த வீட்டில் பெரும் அமைதி நிலவுகிறது. தினமும் இரவு 8.30 மணி ஆகியதும் எனது குழந்தைகள் Ashton (9), Dolcie-Belle(5) அவர்களது அறையில் உறங்கவைத்துவிட்டு, நானும் எனது அறைக்கு சென்று விடுவேன். Becky உறங்கிய இடத்தில் தற்போது Hudson (5 மாத கைக்குழந்தை) உறங்கிக் கொண்டிருக்கிறான்.

தினமும் எனது மகள் Dolcie-Belle "அம்மா எப்பொழுது வருவார்" என கேட்டுக்கொண்டே இருப்பார் என வேதனை தெரிவித்துள்ளார்.

Becky மிகுந்த ஆசையுடன் எதிர்பார்த்த மூன்றாவது குழந்தை தான் Hudson. அவன் பிறந்ததும் கைகளில் கூட ஏந்தாமல் அவள் சென்றுவிட்டாள். நிச்சயம் ஒருநாள் அவள் திரும்பி வருவாள் என எதிர்பார்க்கிறோம் என தன் சோகக் கதையை கூறி முடிக்கிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்