பிரெக்சிட் விடயத்தில் திடீர் திருப்பம்: முக்கிய பிரமுகர் ராஜினாமா

Report Print Balamanuvelan in பிரித்தானியா
118Shares
118Shares
lankasrimarket.com

பிரெக்சிட் விடயத்தில் எதிர்பாராத திருப்பமாக பிரெக்சிட் செயலராக பொறுப்பு வகித்து வந்த David Davis ராஜினாமா செய்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டு வந்த David Davis, பிரெக்சிட் செயலர் என்னும் பொறுப்பிலிருந்து பதவி விலகியுள்ளார்.

பிரதமரின் பிரெக்சிட் திட்டத்தை வெளியிட தான் சரியான நபராக இல்லை என்று கூறியுள்ள David Davis, தான் பிரெக்சிட்டில் நம்பிக்கை வைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

பிரெக்சிட்டில் நம்பிக்கையில்லாத ஒரு ஆள், அதை நம்பும் ஒரு ஒரு ஆளைப்போல் அந்த வேலையை செய்யமுடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

தான் பதவி விலகுவதாக எடுத்த முடிவு தனது தனிப்பட்ட முடிவு என்று கூறியுள்ள அவர், ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சு வார்த்தைகளில் பிரித்தானியா பல விடயங்களை மிக எளிதாக விட்டுக் கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதை தான் ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறியுள்ள பிரதமர் தெரசா மே, அவர் இதுவரை செய்துள்ள பணிக்காக அவருக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

என்றாலும் David Davis பதவி விலகியுள்ளது பிரதமர் தெரசா மேக்கு பலத்த அடியாகவே பார்க்கப்படுகிறது.

David Davisக்கு பதிலாக Dominic Raab இனி பிரெக்சிட் செயலராக பொறுப்பு வகிப்பார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்