இளவரசி மெர்க்கல் ஒரு முட்டாள்: கடுமையாக சாடிய சகோதரி

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா
559Shares
559Shares
lankasrimarket.com

பிரித்தானிய இளவரசியான பின்னர் மேகன் மெர்க்கலின் நடவடிக்கைகள் கோபத்தை ஏற்படுத்துகின்றன என அவரது சகோதரி சமந்தா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்கு முன்னரே மெர்க்கல் குறித்து அவ்வப்போது வசைபாடி வந்த மெர்க்கல், தற்போது திருமணத்திற்கு பின்னர், தந்தையை மேகன் மெர்க்கல் நடத்தும்விதமாக சரியில்லை என்று கூறியுள்ளார்.

தனது மகளை பார்க்கவேண்டும் என்று ஆசைப்படும் அவரை உதாசினப்படுத்துகிறார்கள். இதற்கு இளவரசர் ஹரியும் ஆதரவு தெரிவிக்கிறார். இப்படி நடந்துகொள்ளும் மெர்க்கலை Duchess of Sussex என்று அழைப்பதற்கு பதிலாக முட்டாள் என அழைக்கலாம்.

மேலும், பிரித்தானிய அரச குடும்பத்தில் போலியானவர் மெர்க்கல் என தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். மெர்க்கலின் திருமணத்தில் கலந்துகொள்ளாத தந்தை தாமஸ் மெர்க்கல், திருமணத்திற்கு பின்னர் தனது மகளை சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு வந்தார்.

ஆனால், தற்போது வரை அது நடக்கவில்லை, இதனால் தனது மகளை இனி சந்திக்க முடியாது என்ற வேதனையில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்