பிரித்தானியாவில் பட்டப்பகலில் 54 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: அதிர்ச்சியடைந்த மகன்

Report Print Santhan in பிரித்தானியா
863Shares
863Shares
lankasrimarket.com

பிரித்தானியாவில் 54 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Buckinghamshire பகுதியின் Aylesbury-ல் 54 வயது மதிக்கத்தக்க பெண் தன் 14 வயது மகனுடன் சென்று கொண்டிருந்த போது மர்மநபர் அவரை கத்தியால் குத்தியதால், சிறுவன் அதிர்ச்சியடைந்துள்ளான்.

இதில் அந்த நபர் சிறுவனையும் தாக்கியுள்ளான். இருப்பினும் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதும், தாய் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார்.

இது குறித்து உள்ளூர் ஊடகம் தெரிவிக்கையில், பொலிசாருக்கு சனிக்கிழமை மாலை உள்ளூர் நேரப்படி 03.45 மணிக்கு பெண் ஒருவர் மற்றும் சிலர் கத்தியால் தாக்கப்பட்டுவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து பொலிசார் அங்கு விரைந்து போது 54 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு போராடியுள்ளார்.

அதுமட்டுமின்றி 14 வயது சிறுவன் ஒருவனும் இந்த சம்பவத்தில் அடிபட்டுள்ளான். இதனால் இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், 54 வயது மதிக்கத்தக்க பெண் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

சிறுவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தில் இறந்த 54 வயது மதிக்கத்தக்க பெண், அந்த சிறுவனின் தாய் எனவும் கூறப்படுகிறது.

மேலும் இது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் சந்தேகத்தின் அடிப்படையில் 32 வயது மதிக்கத்தக்க நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் பொலிசார் கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்