கடும் எதிர்ப்பு எதிரொலி: டிரம்பின் பாதுகாப்புக்கு புது வியூகம் வகுக்கும் பிரித்தானிய உளவுத்துறை

Report Print Arbin Arbin in பிரித்தானியா

அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் முதன் முறையாக பிரித்தானியா வருகை தரும் டொனால்டு டிரம்பின் பாதுகாப்புக்காக உளவுத்துறை புது வியூகம் அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எதிர்வரும் ஜூலை மாதம் பிரித்தானியாவுக்கு வருகைதர உள்ளார்.

இதனையடுத்து அவரது பாதுகாப்பு பணிகளுக்காக சுமார் 10,000 பொலிஸ் அதிகாரிகளை பிரித்தானியா களமிறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி நூற்றுக்கணக்கான கலவர தடுப்பு வாகனங்களையும் டிரம்பின் வருகையை முன்னிட்டு களமிறக்க உள்ளனர்.

மேலும் ஜனாதிபதி டிரம்பின் மீது கொலை முயற்சி எதுவும் நடைபெறாமல் இருக்க, அவர் செல்லும் இடமெல்லாம் பாதுகாப்புக்காக 40 பொலிஸ் வாகனங்களையும் தெரிவு செய்துள்ளனர்.

இதுமட்டுமின்றி சிறப்பு ஆயுதப்படை அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் என வலுவான வியூகத்தை அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே டிரம்பின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இதுவரை 53,000 பேர் இணையத்தில் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக உறுதி ஏற்றுள்ளனர்.

டிரம்பின் இதுவரையான கொள்கை முடிவுகள் அனைத்தும் மனித குலத்திற்கே எதிரானது என போராட்டக்குழு காட்டமாக பதிவு செய்துள்ளது.

ஜூலை 12 ஆம் திகதி பிரித்தானியா வருகை தரும் டிரம்ப் மற்றும் மெலானியா தம்பதி அதிகாரப்பூர்வ ஹெலிகொப்டரில் அமெரிக்க தூதரகத்திற்கு செல்கின்றனர். பின்னர் ப்லெந்ஹைம் அரண்மனையில் இரவு உணவு அருந்துகின்றனர்.

அதே நாளில் பிரித்தானிய பிரதமர் மே-உடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார் டிரம்ப்.

பின்னர் வின்ட்சர் அரண்மனையில் ராணியை சந்திக்கின்றார். இறுதி நாள் அன்று ஸ்டாட்லாந்தில் அமைந்துள்ள Turnberry கோல்ப் மைதானத்திற்கும் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...