ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணின் முகமா இது? ஆச்சரியப்பட வைக்கும் புகைப்படம்

Report Print Santhan in பிரித்தானியா

லண்டனில் ஆசிட் வீச்சில் பாதிப்புக்குள்ளான மொடல், அதிலிருந்து மீண்டு வந்து தன்னுடைய பிறந்த நாள் கொண்டாடியது தொடர்பான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Beckton பகுதியில் பிரபல மொடலான Resham Khan தன்னுடைய 21-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, காரில் உறவினர் Jameel Mukhtar உடன் சென்று கொண்டிருந்தார்.

அப்போது காரானது டிராபிக் சிக்னல் அருகே நின்று கொண்டிருந்த போது, திடீரென்று வந்த John Tomlin என்ற நபர், காரின் ஜன்னல் திறந்திருந்ததால், Resham Khan-ன் முகத்தில் ஆசிட்டை வீசிவிட்டு சென்றுவிட்டார்.

இதனால் அவரின் முகம் மிகவும் பாதிக்கபட்டிருந்தது. இதில் அவரது உறவினரான Jameel Mukhtar-க்கும் சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டிருந்தது.

வலியால் துடித்த அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்த இவர் தற்போது தன்னுடைய 22-வது பிறந்த நாளை Turkey-யில் உள்ள Marmaris-ல் நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார்.

அது தொடர்பான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் இவர் பதிவேற்றம் செய்துள்ளதால், இதைக் கண்ட அனைவரும் மிகவும் அழகாக இருக்கிறீர்கள், அப்படி இருந்தவரா இவ்வளவு அழகாக இருக்கிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட John Tomlin என்பவருக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...