டாக்ஸி டிரைவராக நடித்து இளம்பெண்ணை மானபங்கம் செய்தவனுக்கு 12 வருட சிறை

Report Print Trinity in பிரித்தானியா

இங்கிலாந்தில் East Yorkshire பகுதியில் உள்ள Hull பகுதியில் டாக்ஸி ட்ரைவர் போல நடித்து இளம்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவனுக்கு 12 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியை சேர்ந்த அல்நாடார் அஹமத் (40) என்பவனுக்கு எப்போதும் இணையதளங்களில் பாலியல் தொடர்பான படங்களை பார்ப்பது வழக்கம். மற்றும் அதன்படி தனது பெண் நண்பர்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதை பொழுது போக்காக கொண்டிருந்தவன் அஹமத்.

இவன் சமீபத்தில் செய்த ஒரு குற்றத்தை சிசிடிவி காட்சிகள் இனம் கண்டு கொடுத்திருப்பதால் அஹ்மத் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றம் நிரூபணம் ஆகியுள்ளது.

அந்த சிசிடிவி காட்சிகளை வைத்துதான் நீதிபதி இந்த குற்றத்திற்கான தனது தீர்ப்பை எழுதியுள்ளார். அதன்படி

புதுவருடம் தொடங்குவதற்கு சில மணி நேரம் முன்னதாக ஹல் சிட்டி சென்டர் அருகில் தனது காரை நிறுத்தி விட்டு இவனது "நோக்கத்திற்காக" யாரேனும் சிக்குவார்களா என்று காத்திருந்திருக்கிறான் அஹமத்.

அப்போது 20 வயதான இளம்பெண் ஒருவர் அஹமதை கவர்ந்திருக்கிறார். அவருடன் பேசி தன்னை கார் ட்ரைவர் என்று கூறி அப்பெண்ணை காருக்கு அழைத்திருக்கிறான்.

அந்த பெண்ணும் வாடகை கார்களுடன் இவனது காரும் நின்றதால் இவனை கார் ட்ரைவர் என்று நம்பி ஏறியிருக்கிறாள்.

அவளது மொபைலில் இந்த டாக்ஸி டிரைவர் வித்யாசமாக நடந்து கொள்கிறான் என்று ஒருவருக்கு குறுஞ்செய்தியும் அனுப்பி இருக்கிறாள்.

ஆனால் பயணத்தை ஆரம்பித்த 15வைத்து நிமிடத்தில் இப்பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்ட அஹமத் இவனது "நோக்கம்" முடிந்தபின் அப்பெண்ணை அவரது முகவரியில் இறக்கி விட்டும் சென்றிருக்கிறான்.

அதன்பின் அப்பெண் அளித்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் தான் மேற்கண்ட விடயங்கள் தெரிய வந்துள்ளன.

நடந்த சம்பவம் பற்றி அஹமத் நீதிபதியிடம் சொல்லும்போது அவரது குட்டை பாவாடையும் அழகிய கால்களும் தன்னை கவர்ந்திழுத்ததால் இதனை செய்ததாக குற்றத்தை ஒப்பு கொண்டிருக்கிறான்.

இதனை கேட்ட நீதிபதி மிகவும் கோபத்துடன் தனது இறுதி தீர்ப்பை வழங்கியுள்ளார். இதில் பெண்களை மானபங்கம் செய்ய பயன்படுத்தப்பட்ட அஹமதின் காரை அழிக்க உத்தரவிட்டவர், இறுதிவரை பாலியல் குற்றவாளி என்கிற பெயரோடுதான் வாழ வேண்டும் என்று தனது தீர்ப்பை கூறியிருக்கிறார்.

மேலும் அஹமதிற்கு 12 ஆண்டு சிறை தண்டனையும் கிடைத்திருக்கிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...