லண்டன் ரயில் நிலையத்தில் பயங்கரம்: பொலிசார் குவிந்ததால் பரபரப்பு

Report Print Arbin Arbin in பிரித்தானியா

வடமேற்கு லண்டனில் அமைந்துள்ள ரயில் நிலையம் ஒன்றில் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் ஸ்காட்லாந்து யார்ட் பொலிசார் தெரிவிக்கையில், நபர் ஒருவர் ரயில் நிலையத்தில் மரணமடைந்த நிலையில் கிடப்பதாக வந்த தொலைபேசி அழைப்பின் பேரில் சம்பவப்பகுதிக்கு வந்ததாக தெரிவித்துள்ளனர்.

அதே பகுதியில் படுகாயமடைந்த நிலையில் 30 வயது தாண்டிய நபர் ஒருவரையும் பொலிசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதிகாலை 1.46 மணியளவில் Greenford ரயில் நிலையத்தின் வெளியே இருவர் கண்மூடித்தனமாக சண்டையிட்டு வருவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை இறந்த நிலையில் மீட்டுள்ளனர்.

மரணமடைந்த நபர் தொடர்பில் இதுவரை தகவல் எதுவும் இல்லாத நிலையில் அவரது உறவினர்களிடம் தகவல் தெரிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் இதுவரை எந்த கைது நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

இச்சம்பவத்தை அடுத்து குறித்த ரயில் நிலையமானது மூடப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த பகுதியானது சமூகவிரோதிகள் மற்றும் மது அருந்துவோர்களால் தொடர்ந்து பிரச்னை ஏற்படும் பகுதி என கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...